1531458896 indian sri lankan 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்: அக்குரணை தொழிலதிபர் கைது!

Share

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அக்குரணைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48,900 யூரோ (EUR), 14,000 அமெரிக்க டொலர் (US$), 26,650 இந்திய ரூபாய் (INR) நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன:

கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் இலங்கை ரூபா பெறுமதி சுமார் 24.09 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து இவ்வளவு பெரிய தொகையிலான நாணயங்களை அவர் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்துக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...