1769831545 dead 6
செய்திகள்அரசியல்இலங்கை

கையடக்கத் தொலைபேசி தகராறு: 14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

Share

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் நேற்று (30) இரவு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த 14 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையில் நேற்றிரவு தொலைபேசி ஒன்று தொடர்பாகக் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதமான மன்னாவால் (பெரிய கத்தி) மகளைக் குத்தியுள்ளார்.

பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரான தந்தையைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தந்தையே, ஒரு சிறிய காரணத்திற்காகத் தனது மகளைக் கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்....

liver
இலங்கை

இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கம்.

இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க, இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த...