Gayan Abeykoon DailyNews 2025 01 16 06
செய்திகள்இலங்கை

இலங்கையை கட்டியெழுப்புவோம்: 78 ஆவது சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் தீவிரம்!

Share

இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவினை ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.

சுதந்திர தின இராணுவப் பேரணி மற்றும் ஏனைய கலை நிகழ்வுகளுக்கான விசேட ஒத்திகை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா திகதிகளை அறிவித்துள்ளார்:

தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். ஒத்திகை நடைபெறும் நாட்களிலும், பிரதான தினமான பெப்ரவரி 04 ஆம் திகதியும் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்படலாம் அல்லது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
8f144b60 f970 11ef 9e61 71ee71f26eb1.jpg
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளையில் இளம் வயதுக் கர்ப்பங்கள் அதிகரிப்பு; வெலிக்கந்தையில் அதிக சிறுவர் குற்றங்கள் – அமைச்சர் எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இளம் வயதுக் கர்ப்பங்கள் மற்றும் இணையவழி வன்முறைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும்...

Screenshot 2025 12 02 at 16.09.23.webp
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளித் தாக்கம்: 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்து தவிப்பு – விசேட பாதுகாப்புத் திட்டம் தயார்!

சமீபத்தில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் விளைவாக 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது தாய், தந்தை...

vikatan 2025 06 24 deer3cum america iran
உலகம்செய்திகள்

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானிய வெளியுறவு அமைச்சர் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானைத் தாக்க முற்பட்டால், அங்குள்ள அமெரிக்க இராணுவத்...

bee721eca96246c6bdfe477cb1fb978e
செய்திகள்உலகம்

60 பில்லியன் டொலர் வருவாய்: நெட்ஃபிளிக்ஸை முந்தியது யூடியூப்!

உலகின் முன்னணி காணொளி தளமான யூடியூப், 2025 ஆம் நிதியாண்டில் 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான...