Arrested
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுமி வன்புணர்வு!! – பருத்தித்துறை இளைஞர்கள் கைது

Share

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது – 15) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கைதான இளைஞர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள். இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...