IMG 9664
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு சிறுமியின் மரணம்: சுகாதார அமைச்சு தீவிர விசாரணை – நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த உறுதி!

Share

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் குறித்து, சுகாதார அமைச்சு உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (09) நாடாளுமன்ற அமர்வின் போது, முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்:

கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வாமை (Allergy) காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, டிசம்பர் 21 ஆம் திகதி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த மரணம் குறித்து வைத்தியசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சுக்குக் கிடைத்துள்ளன.

வைத்தியசாலை ஊழியர்களின் கவனக்குறைவு அல்லது அசமந்த போக்கினால் இந்த மரணம் நிகழ்ந்ததா என்பது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த அமைச்சர், விசாரணை அறிக்கைகளின் முக்கிய விபரங்களை, விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...

world 168
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் இறக்குமதியாளர்களுக்கு வரிப்பணம் மீளளிப்பு: புதிய நடைமுறை திங்கட்கிழமை ஆரம்பம்!

அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வசூலிக்கப்பட்ட...

world 167
செய்திகள்உலகம்

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்கள்!

ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் கொள்கையினால், அமெரிக்க ஜனாதிபதி...