44518231 sre
சினிமாபொழுதுபோக்கு

ஸ்பெஷல் சாங் எனக்குப் பிடிக்காது, ஆனால்… – ‘புஷ்பா 2’ முடிவு குறித்து மனம் திறந்த ஸ்ரீலீலா!

Share

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஆடிய ‘கிஸிக்’ (Kissik) பாடல் குறித்தும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் கூறியதாவது, பொதுவாக மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்புப் பாடல்களுக்கு (Special Appearance) நடனமாடுவது எனக்குப் பிடித்தமான விஷயம் அல்ல. நான் நடிக்கும் படங்களில் மட்டுமே ஆடுவதையே விரும்புகிறேன்.

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்திற்காக அந்த முடிவை எடுத்தது மிகவும் யோசித்தே எடுக்கப்பட்டது. அந்தப் பாடல் தனக்குப் மிகப்பெரிய அளவில் ‘ரீச்’ (Reach) கொடுத்திருப்பதால், அது சரியான முடிவு என்றே தற்போது கருதுகிறேன்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற ஜனவரி 10-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஸ்ரீலீலாவுக்குப் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

 

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...