25 68de585f85210 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை மறுதினம் முதல் வடக்கு ரயில் பாதை முழுமையாகத் திறப்பு: மீண்டும் ஓடத்தொடங்கும் ‘யாழ்தேவி’!

Share

புனரமைப்புப் பணிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம், தற்போது ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம் (டிசம்பர் 24) முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும்.

பயணிகள் தங்களது பயணங்களை இலகுவாக்கும் வகையில், யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட – AC) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் நேரடி ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்புவது, பண்டிகைக் காலத்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...