sumanthiran mp
செய்திகள்அரசியல்இலங்கை

தேர்தல் வாக்குறுதியை மீறும் புதிய சட்டவரைவு – பயங்கரவாதத் தடைச்சட்டப் பதிலீட்டை எதிர்க்கிறார் சுமந்திரன்!

Share

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் (PTA) பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டவரைவு, முந்தைய சட்டங்களை விடவும் மோசமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய வரைவு குறித்து சுமந்திரன் முன்வைத்துள்ள முக்கிய கருத்துக்கள்:

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தை விடவும், கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விடவும் இப்புதிய வரைவில் ஆபத்தான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றே கூறியிருந்தது. ஆனால், தற்போது மற்றொரு சட்டத்தின் ஊடாக அதனைப் பதிலீடு செய்ய முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குத் தனித்துவமான பிரத்யேக சட்டமொன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி முன்னர் இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்த எம்.ஏ.சுமந்திரன், இப்புதிய பதிலீட்டு நடவடிக்கையைத் தாம் முற்றாக எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார். மேலும், புதிய வரைவின் உள்ளடக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, தமது ஆட்சேபனைகளை மிக விரைவில் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...