25 693c2181e5b05
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மண்சரிவு அபாயம்: முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் அபாயக் கட்டங்கள்!

Share

மண்சரிவு என்பது உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், இலங்கையில் பிரதானமாக மழைவீழ்ச்சி காரணமாகவே மண்சரிவுகள் ஏற்படுகின்றன என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மூன்று விதமாக விடுக்கப்படுகின்றன. அவை முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுவதாக கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சியைக் கணக்கிடுவதன் மூலம் கிடைக்கும் எண்ணிக்கைப் பெறுமானத்துடன், உரிய அறிவிப்புகள் அந்தந்த கட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட இடங்கள் மாத்திரமே மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களும் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் எந்தவொரு கட்டத்தின் கீழும் மண்சரிவுச் சம்பவம் ஏற்படக்கூடும் என்றும், சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரிய மண்சரிவுக்கு மழைவீழ்ச்சி காரணமாக அமையலாம் என்றாலும், ஒன்று மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களில், மனிதனால் உருவாக்கப்பட்ட மண் மேடுகள் சரிந்து விழுதல் போன்றன ஏற்படக்கூடும் என கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அத்துடன், விடுக்கப்படும் அறிவிப்பில் மண் மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் புரளுதல் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர,

“இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட சில மண்சரிவுப் பிரதேசங்கள் உள்ளன. உதாரணமாக கலபட, அத்துடன் பியனில்ல, வீரியபுர, உடபத அதாவது புளத்கொஹுபிட்டிய பகுதியில். இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் உள்ளன. அங்கும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதாவது வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சரிகின்றது. அதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்,” என்றார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...