shivajilingam
அரசியல்இலங்கைசெய்திகள்

வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

Share

வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் (நகரபிதா) எம்.கே. சிவாஜிலிங்கம் இன்றைய தினம் (டிசம்பர் 13) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நல நிலை குறித்து மேலதிக தகவல்கள் பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடந்த 2025 அக்டோபர் 15 அன்று வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராகச் செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகக் கடந்த மாதம் நவம்பர் 28 அன்று தெரிவாகியிருந்தார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...