“சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்துக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்” – இவ்வாறு கீர்த்தி சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படம் தொடர்பில் வெளியாகிய விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிநடை போடுகிறது அண்ணாத்த திரைப்படம். இப் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், சத்யன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே கைகோர்த்திருந்தது.
இந்த படத்தில், சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படத்துக்கு நேர்மறையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், 70 வயதான சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிப்பதா என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா, கீர்த்தி சுரேஷ் ரஜனிக்கு தங்கையாக மட்டுமல்ல அவருக்கு ஜோடியாகவும் நடிப்பார். சினிமா என்பது நிழல். அதில் வெறும் நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டும்.
வயதை பார்ப்பது தேவையற்ற விடயம். ரஜனிகாந்த் எப்போழுதும் ஹீரோவாகத் தான் அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளார். எனவே அவருக்கு தங்கையாக மட்டுமல்ல ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் கீர்த்தி நடிப்பார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜனிகாந்த் எவ்வாறு இருந்தாரோ அப்படியே தன இப்போதும் உள்ளார். – என தெரிவித்துள்ளார்.
1981-ஆம் ஆண்டு வெளிவந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கெரஹர்ஹி சுரேஷின் தாய் மேனகா நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரே ஹீரோவுக்கு ஜோடியாக அம்மா மற்றும் மகள் நடித்து உள்ளனர். குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக லட்சுமி மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்த வரிசையில், மேனகாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புக்கள் உள்ளனவா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Leave a comment