25 6938095dc8d5d
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர் புனரமைக்கும் பாலத்தை யாழ். துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார்!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியின் 11ஆவது கிலோமீட்டரிலுள்ள பாலத்தின் புனரமைப்புப் பணிகளை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி இன்று (டிசம்பர் 9) பார்வையிட்டார்.

இந்தப் புனரமைப்புப் பணியில் இந்திய இராணுவத்தினரின் ‘ஒப்ரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) அணியினர், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள், ‘ஒப்ரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையின் மூலம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே A-35 வீதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன.

தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியா இதுவரையில் உணவு, உடை, மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.

பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...