25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

Share

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (நவம்பர் 25) முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் (mm) அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...