1795415 01 1
செய்திகள்இலங்கை

புன்னாலைக்கட்டுவன் கொலை: தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

Share

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (நவம்பர் 24) காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மது அருந்தச் சென்ற நபர் ஒருவர், இருவரால் தாக்குதலுக்கு உள்ளானார்.

தாக்குதலுக்கு உள்ளான அவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதலை நடத்திய இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், அவர்களில் ஒருவரை இன்றைய தினம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காங்கேசன்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...