Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

Share

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போதுள்ள 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை குடிமகனிடமிருந்து கெசினோக்களுக்கு வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் தற்போதைய 50 அமெரிக்க டொலர்களில் இருந்து 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்படும்.

வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் வர்த்தமானியால் அதிகரிக்கப்படவில்லை.

இந்த கெசினோ வரி மற்றும் நுழைவுக் கட்டண உயர்வுகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகளின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gun
உலகம்

பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் வழங்கப்பட்ட துப்பாக்கி.

துருக்கியில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், ஸ்டார்மருக்கு அவரது...

king
உலகம்

மாற்றி எழுதப்படுகிறது 70 ஆண்டுகால வரலாறு!

ரூத் எல்லிஸு, இவர்தான் பிரித்தானியாவில் தூக்கிலிடப்பட்ட கடைசிப் பெண்ணாவார், இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, பிரித்தானிய...

oil price
உலகம்

கிடு கிடுவென உயர்வடையும் எரிபொருள் விலை!

மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளமையால், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து...