14 6
உலகம்செய்திகள்

ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை முறையாக அங்கீகரித்த இஸ்ரேல் : அடுத்தது என்ன..!

Share

அமெரிக்க ஜனாதிபதி ட;ரம்ப் முன்வைத்த திட்டத்தை இஸ்ரேலின் அமைச்சரவை முறையாக அங்கீகரித்துள்ளது.

நேற்று(09.10.2025) இரவு கூடிய அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதனையடுத்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது உடனடியாக நடக்கும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர், அமைச்சரவை ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்திற்குள் இது தொடங்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் காசாவில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கும், அத்துடன் சுமார் 53வீத பகுதியை மாத்திரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 72 மணித்தியாலங்களுக்குள், உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களும் வழங்கப்படும். இருப்பினும் அதற்கு எவ்வளவு காலம் ஆகலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பின்னர் இஸ்ரேல், தமது சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் சுமார் 250 பாலஸ்தீன கைதிகளையும், காசாவிலிருந்து 1,700 கைதிகளையும் விடுவிக்கும் என்று பாலஸ்தீன தரப்பு தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் திட்டத்தின்படி, ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதியின் எச்சங்களுக்கும் பதிலாக 15 காசா வாசிகளின் உடல்களையும் இஸ்ரேல் திருப்பி அனுப்பும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதேவேளை, மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லொறிகளும் காசாவிற்குள் நுழையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...