ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் எந்தவித பாதுகாப்பும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.ஏனென்றால் அவர்களுக்கு தாக்குதல் நடக்காது என்று தெரியும் என்பதால் ஆகும் என 2021 ஆம் ஆண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
தாக்குதலின் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார் என்றார். அதனால் இந்தியாவிடம் சாராவை கேட்கலாம்.
இந்த நாடு கத்தோலிக்க மக்களை ஏமாற்றியுள்ளது.
நல்லாட்சி அரசில் 700 பேரை கைது செய்தோம். உங்களுக்கு இது தொடர்பில் ஒன்றும் சொல்வதற்கில்லை.
மேலும், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.