4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

Share

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”செம்மணி – மனித புதைகுழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.

தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எனினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது நேற்றுடன் (03) குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் என மொத்தமாக 38 என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் குறித்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
விக்ரம் மிஸ்ரி
இலங்கை

இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர்!

இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...

exam hall
இலங்கை

தொடரும் காலநிலை சீர்கேடுகள் – திட்டமிடப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல்.

தொடரும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை...

அகில விராஜ் காரியவசம் 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய...

சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...