10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

Share

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பிலான பல பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியாரச்சி அண்மையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட ஹர்ஷன, தற்பொழுது நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ரில்வின் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தாம் நாடாளுமன்ற உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ரில்வின் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஒருவர் இந்த வெற்றிடத்திற்காக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...