18 5
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில்… ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த கிழக்காசிய நாடு

Share

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு முன்னர் ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், உலகின் முன்னணி எண்ணெய் இறக்குமதியாளரும், ஈரானிய கச்சா எண்ணெயை அதிகமாக வாங்குபவருமான சீனா ஜூன் 1 முதல் 20 வரை ஒரு நாளைக்கு 1.8 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் இறக்குமதி செய்துள்ளது.

ஆனால், ஜூன் 27 ஆம் திகதி நிலவரப்படி சீனாவின் ஈரானிய எண்ணெய் மற்றும் கண்டன்சேட் இறக்குமதியின் சராசரி நாள் ஒன்றுக்கு 1.46 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது, இது மே மாதத்தில் ஒரு மில்லியன் பீப்பாய்டாக இருந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், மே மாதத்தில் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.83 மில்லியன் பீப்பாய்களை எட்டிய பின்னர், ஈரானின் மிதக்கும் சேமிப்பகத்திலிருந்து கிடைக்கும் விநியோகங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இறக்குமதி அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக ஈரானிய எண்ணெய் சீன துறைமுகங்களை அடைய குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். மே மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் சீனாவின் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வலுவான ஏற்றம், ஈரானில் இருந்து சீனாவின் இறக்குமதி தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.

மட்டுமின்றி, ஈரானிய எண்ணெயின் முக்கிய வாங்குபவர்களான சுயாதீன சீன நிறுவனமான teapot சுத்திகரிப்பு நிலையங்களும் அவற்றின் கையிருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கை காரணமாக ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடைகள் தளர்த்தப்படும் என்றால் சீன எண்ணெய் வாங்குதலை மேலும் அதிகரிக்கும்.

இதனிடையே, ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் உட்பட, ஈரான் மீதான அதிகபட்ச அழுத்த நடவடிக்கைகளை அமெரிக்கா கைவிடவில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆனால் ஈரானை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் அமலாக்கத்தில் தளர்வு ஏற்படுத்துவதற்கான அறிகுறிகளை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி மந்தமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் இதுவரை ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி மாத சராசரியாக நாள் ஒன்றிற்கு 1.5 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...