15 2
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டால் வவுனியா வடக்கு தேசிய மக்கள் சக்தியிடம் பறி போகும் அபாயம்

Share

தமிழரசுக் கட்சியின்(ITAK) செயற்பாட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள்சக்தி 6 உறுப்பினர்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 2 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி 2 உறுப்பினர்கள், சர்வஜன அதிகாரம் 1 உறுப்பினர் என 23 உறுப்பினர்கள் உள்ளனர்.இலங்கை விமான பயணம்

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஆட்சி அமைப்பதாக முன்னராக கட்சிகள் மட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் வவுனியா மாநகர சபை ஆட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வசம் சென்றது. தற்போது வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சி 5 உறுப்பினர்களுக்குள்ளும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை விமான பயணம்

தமிழரசுக் கட்சி சார்பில் வவுனியா வடக்கில் தி.கிருஸ்ணவேனி என்பவரை தவிசாளராக நிறுத்துவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

குறித்த தவிசாளரை ஏற்க முடியாது என தமிழரசுக் கட்சியின் வட்டாரம் வென்ற 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கட்சி தவிசாளரை மாற்றாது தி.கிருஸ்ணவேணி என்பரை முன்நிறுத்துமாக இருந்தால் தாம் வேறு ஒருவரை முன்னிறுத்த வேண்டி வரும் என அவர்கள் கட்சியிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் பேசியுள்ளனர். இலங்கை விமான பயணம்

அத்துடன், எதிரணியில் தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி என்பன இணைந்து 8 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் குடியேற்ற கிராமத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் என்பதுடன், சர்வஜன அதிகார உறுப்பினரும் பெரும்பான்மை இனத்தவராவார்.

இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தரப்பு 10 உறுப்பினர்களை இலகுவாக பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது.

மறுபுறத்தில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்பன 12 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன் இதில் தமிழரசுக் கட்சியின் இருவர் ஒரு நிலைப்பாட்டிலும், மூவர் வேறு நிலைப்பாட்டிலும் உள்ளதால் தெரிவின் போது வாக்குகள் மாறுபட வாய்ப்புள்ளது. இலங்கை விமான பயணம்

இதனால் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கட்சிகள் சமநிலை பெற்று திருவுலச்சீட்டுக்கு செல்லவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றைய உறுப்பினரின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கவோ வாய்ப்புள்ளது.

எனவே, தமிழரசுக் கட்சி இது தொடர்பில் கவனம் செலுத்தி தவிசாளரது பெயரை முன்மொழிந்தால் மட்டுமே தமிழ் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் உறுதியான நிலை ஏற்படும் என மற்றைய தமிழ் தேசியக் கட்சிகளின் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...