4 8
உலகம்செய்திகள்

ஈரானின் அணுஉலைகளை தாக்கிய அமெரிக்கா: ஈரான் கொடுத்த முக்கிய விளக்கம்..!

Share

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்ததையடுத்து அமெரிக்காவும் இந்த தாக்குதலில் உள்நுழைந்துள்ளது.

ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் உள்ளிட்ட மூன்று தளங்களை அமெரிக்கா நேற்றையதினம் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Fordow is gone என்பதன் மூலம் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை ட்ரம்ப் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், ட்ரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.

ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது என்று ஈரானின் கோம் மாகாண செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு அருகிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், ஈரான் மீதான அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பை மிக தீவிரப்படுத்தி வருவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...