18 1
இலங்கைசெய்திகள்

யாழ் – கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்

Share

கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் (David Peiris Airlines) நிறுவனத்திற்கு நேற்று (16) வழங்கியுள்ளது.

அதற்கமைய கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையத்திற்கும் (Ratmalana Airport) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் (Jaffna International Airport) இடையில் நேரடி உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக செஸ்னா-280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விமானப் பயணத்திற்கு 01 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப்பயணத்திற்கு இருவழி கட்டணமாக 68,000 ரூபா அறவிடப்படுவதுடன் ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் அதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது வடக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதுடன் வட பிராந்தியத்தில் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...