25 6848419faa072
இலங்கைசெய்திகள்

பயிரிடப்படாத காணிகளை குறி வைக்கும் அரசாங்கம்! நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Share

நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையுடன் இணைந்து, கந்தளாய் சீனித் தொழிற்சாலை தளத்தில் 2,000 ஏக்கர் சோள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இந்த நடவடிக்கையானது நாளை(11.06.2025) முதல் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பயிரிடப்படாத நிலங்களைப் பயன்படுத்தி நாட்டின் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...