25 684842349ae4c
இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியத்தின் இறுதிச் சந்தர்பத்தை கோட்டை விட்ட தமிழரசுக் கட்சி

Share

ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்பத்தையும் தமிழரசுக் கட்சி கோட்டை விடுகிறது என ரெலோ தரப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ரெலோ தரப்பு கருத்து தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டன.

இதன்பின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது சாதாரணமாக ஏற்படுத்தப் படவில்லை. பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் தான் சாத்தியமானது.

இதன் பின் தோன்றிய அரசியல் சூழ்நிலை மாற்றங்களில் வன்னி நிலப்பரப்பில் தமிழ் தேசிய கட்சிகளின் கைகளில் சபைகளை வலுப்படுத்துகின்ற நிலைப்பாடு பற்றி பேசவே நாங்கள் அழைக்கப் பட்டோம்.

அதன் பிரகாரம் திங்கள் மதியம் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே சிவஞானம் ஐயா, அலுவலகத்தில் அக்கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன், சந்திப்பு நடைபெற்றது.

அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் பயனற்றவை. வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக ஆசனங்களை பெற்றுள்ளார்கள்.

தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்க். மேலும், கிழக்கு மாகாணத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தோம்.

இன்னும் காலம் பிந்தவில்லை. தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை செய்ய முடியும். அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம்.

ஆனாலும் இணக்கமான சூழ்நிலைக்கு பதிலாக வறட்டு சவடால்களே பதிலாகின. தனிமனித வீர வசனங்களால் எமது இனத்தினை நேர்த்தியான பாதையில் வழி நடத்த முடியாது. மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்கள் எதிர்பார்ப்பு.

அதை செய்வதற்கு விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளை வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது.

எப்பொழுதும் ஒற்றுமைக்காகவே ரெலோ பாடுபட்டு வந்துள்ளது. அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் நாங்கள். அதை தவறாக புரிந்து கொண்டு வீர வசனங்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை. வெட்டிச் சவடால்களுக்கு நாங்கள் ஒருபொழுதும் இடமளியோம்” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...