25 6848573303c6e
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அரங்கேறிய போர் குற்றங்கள்! ஜேர்மனியில் அநுரவுக்கு காத்திருக்கும் அழுத்தம்

Share

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜேர்மன் வலியுறுத்த வேண்டும் என ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ்(Philipp Frisch) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளைய தினம் உத்தியோகபூர்வ விஜயமாக ஜேர்மன் செல்லவுள்ளார்.

இந்த நிலையில், ஜேர்மனிக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிலிப் ஃபிரிஷ் அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், சாட்சிய சேகரிப்பு செயல்முறையையும் நிறுவியுள்ளது.

எனினும், அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் இதுவரையான செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் அதன் முந்தைய அரசாங்கங்களிடமிருந்து வேறுபட்டதாகத் தெரியவில்லை.

இதன்படி, போர்க்குற்றங்களில் தொடர்புடைய முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, பேரவையின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளது.

30 வருட யுத்தத்தின் போது, கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரச படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன், சிலரை வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கியுள்ளன.

எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜேர்மனி விஜயத்தின் போது, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தமது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவரை ஜேர்மன் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....