images 1 2
இலங்கைசெய்திகள்

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம் : யன்னல் வழியாக கீழே குதித்த மக்களால் பரபரப்பு

Share

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் உயிரை காப்பாற்ற பொதுமக்கள் ஜன்னல், பால்கனி வழியாக கீழே குதித்த சம்பவம் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரமான மர்மாரிஸ் இன்று (03) அதிகாலையில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டிங்கள் குலுங்கிய நிலையில் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் மேலும் சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் மற்றும் பால்கனி வழியாக வெளியே குதித்துள்ளனர்.

இதில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் இலட்சக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...