8 32
சினிமா

உடல்எடை குறித்த உருவக் கேலிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த செம பதிலடி..

Share

இந்திய மக்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நாயகியாக கெத்து காட்டி வந்தவர் தமிழிலும் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் Cannes திரைப்பட விழாவில் கலக்கிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 2011ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அதன்பின் உடல் ரீதியான மாற்றங்களால் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து உருவக் கேலிக்கு ஆளாகினார். தனக்கு வந்த உருவக் கேலி குறித்து ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பிறந்த பிறகு கொஞ்சம் எடை கூடியதற்காக பல சந்தர்ப்பங்களில் என்னை உருவகேலி செய்கிறார்கள்.

ஆனால் நான் உடல் எடை கூடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை, மகள் பிறந்த பிறகு நான் எடை கூடினேனா? அல்லது உடலில் நீர் பிடித்ததா என்னும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆர்வம்.

என்னை விட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா? என் எடையால் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.

என்னை பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும் என்ன பேசினாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கோபமாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...