10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

Share

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

பேருந்துக்கு முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.

சடலம் தங்காலை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...