23 10
இலங்கைசெய்திகள்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரத்தானிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்

Share

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரித்தானிய(UK) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

‘போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதித்ததுடன் பிரித்தானியாவின் கடமை முடியவில்லை. பிரித்தானியா இன்னும் அதிக பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது’ என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மக்டோனா, ‘பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் நாங்கள் துணையாக உள்ளோம்.

இலங்கையின் விடயத்தில் பிரிட்டன் தனது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...