2 24
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு நாமல் கோரிக்கை

Share

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உகண்டாவில் காணப்படுவதாக கூறப்பட்ட பணத்தையும் அரசுடமையாக்குமாறு அவர் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ராஜபக்சக்கள் பணம் உழைத்திருந்தால் அவற்றை அரசாங்கம் அரசுடமையாக்க வேண்டுமென கோரியுள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க கூறிய பொய்களையே இன்று அனுரகுமாரக்கள் கூறுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

18 பில்லியன் டொலர் பதுக்கி வைத்திருப்பதாகவோ இல்லை எனவே ரணில் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் தந்திரமான ஓர் அரசியல்வாதி எனவும் அனுரகுமார தரப்பினர் இந்த பொய்களை சமூகத்திற்கு எடுத்துச் சென்று தறபொழுது தடுமாறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான குவித்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எந்தவொரு ஒத்துழைப்பினையும் வழங்கத் தயார் எனவும், வேண்டுமென்றால் சத்தியக்கடதாசி ஒன்றை வழங்கவும் தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...