6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

Share

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தொடர்ந்து போர் பதற்றம் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானியர்களின் விசாக்கள் இரத்து என ஏராளமான தடைகளை இந்திய மத்திய அரசு விதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், எல்லையை ஒட்டிய பகுதிகளில் படைகளை பாகிஸ்தான், குவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் லடாக்கை ஒட்டியுள்ள பென்சி,காஷ்மீரின் ஸ்கார்டு, கைபர் பக்துங்வாவின் ஸ்வாட் என எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், எப் -16, ஜே -10, ஜேஎப் – 17 ஆகிய யுத்த விமானங்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....