tamilnaadi 5 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 21 பிப்ரவரி 2025 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 21 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 21.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 9 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் அஸ்வினி, பரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் கௌரவம் ஏற்படும்.உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க விஷயத்தில் கவனம் தேவை. இன்று குடும்ப பிரச்சினைகள் குறித்து விவாதிப்பீர்கள். முக்கிய வேலைகளை முடிப்பதில் துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அலைச்சல் ஏற்படும். பருவ கால நோய் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முதலீடு தொடர்பான விஷயத்தில் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை முடிப்பதிலும், சிந்தனையிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் அதிகரித்து வரும் தேவைகளால் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீக வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து நேர்மறையான செய்திகள் கேட்பீர்கள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் நிச்சயமான வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். இன்று பெற்றோரின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். இன்று பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த ஆடம்பரத்திற்காக அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆசீர்வாதத்தால் நீண்ட காலமாக எதிர்பார்த்து வேலைகளில் செய்து முடிப்பீர்கள். சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் இனிமையான பேச்சால் தீரும். கண் தொடர்பான பிரச்சனையில் கவனம் தேவை.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் தேவை. இங்கு விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாள். எந்த ஒரு வேலையும் தைரியத்துடன், அச்சமின்றி செய்வதன் நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சேவை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி, போட்டி தொடர்பான விஷயத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் முதலீடு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. துறை நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான சூழலால் மனக்கலக்கம் ஏற்படும். தொழில் தொடர்பாக கவனமாக செயல்படவும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி அடையும். மனமகிழ்ச்சி தரக்கூடிய நாள். இன்று தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். திருமணம் தொடர்பான திட்டங்கள் நல்ல பலனை தரும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம உணர்வு அதிகரிக்கும். நிதி நிலையம் முன்பை விட சிறப்பாக இருக்கும் சிலருக்கு வாயு, அஜீரணக் கோளாறு ஏற்படும். உங்களின் உடல் நலம் மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் லாபத்திற்காக இந்த வேலை செய்தாலும் அதில் சிறப்பான லாபம் கிடைக்கும். இன்று உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் கவனமாக செயல்படவும். நிதிநிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். இன்று அதிகமாக பணம் செலவிட வாய்ப்பு உள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று புதிய யோசனைகள் சிறப்பான பலனைத் தரும். நாள் முழுவதும் மிக குழப்பத்திலேயே இருப்பீர்கள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று உங்களின் வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்காது. இன்று வேலை தொடர்பான பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் மன உறுதி மேம்படும். உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சி எடுப்பீர்கள். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தினருடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நேரத்தை செலவிடுவீர்கள்.

Share
தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...