4 36
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் வேலன் சுவாமிகள்! தையிட்டி விகாரை குறித்து வாக்குமூலம் பெற அழைப்பு

Share

சர்ச்சையில் வேலன் சுவாமிகள்! தையிட்டி விகாரை குறித்து வாக்குமூலம் பெற அழைப்பு

கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நாளையதினம் (20) பலாலி காவல்துறை நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி குறித்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, இந்த போராட்டத்திற்கு காணி உரிமையாளர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாலும் ஆதரவு தெரிவிக்கபட்டது.

அத்தோடு, இதே விவகாரத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....