செய்திகள்
ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் பதவி துறப்பதற்கு தயார். – ஹரின் பெர்ணான்டோ.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயார்.” –
இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ.
ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதிக்கான அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ரஞ்சன் ராமநாயக்க என்பவர் நிச்சயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர். எனவே, சிறை தண்டனை அனுபவித்துவரும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் எம்.பி. பதவியை துறக்க நான் தயார். ” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login