20 7
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு : சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து

Share

அஸ்வெசும கொடுப்பனவு : சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து

வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

‘எதிர்காலத்துக்கான பட்ஜெட்’ என்ற தொனிப்பொருளில் நேற்றைய தினம் (07.02.2025) கொழும்பில் (Colombo) இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் “தற்போதுள்ள வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமை நிலை தொடர்பில் சரியான தரவுகள் அரசாங்கத்திடமும் இல்லை.

வறுமை நிலை அதிகரித்தமை தொடர்பில் சர்வதேச நிறுவனமொன்று தரவுகளை வெளியிட்டிருந்தது. அதற்கமைய மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமையிலிருப்பதாகக் கூறப்பட்டது.

அந்த வகையில் முன்னர் காணப்பட்ட வறுமை நிலைமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களை விட, அஸ்வெசும வேலைத்திட்டம் சிறந்தது எனக் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அது திட்டமிடலற்ற, பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்ட, தொழிநுட்ப அடிப்படையிலன்றி, தரவுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும்” என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, முன்னர் காணப்பட்ட சமூர்த்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும சிறந்த திட்டம் எனக் குறிப்பிடுவதற்கான காரணம் அவற்றில் காணப்பட்ட அரசியல் தலையீடுகளை விட இத்திட்டத்தில் அவ்வாறான போக்கு அவதானிக்கப்படவில்லை என்பதனாலாகும்.

எனவே முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும திட்டத்தில் சிறந்த விடயங்கள் பல காணப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பண பரிமாற்றம் வங்கி முறையூடாக முன்னெடுக்கப்படுதல் உள்ளிட்டவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றோம்.

தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதில் காணப்படும் ஆர்வமின்மை இலங்கையில் காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...