6 13
இலங்கைசெய்திகள்

அநுர வசிக்கும் வீடு..! நாட்டை இயக்கும் மறைகரத்தை கூறும் அரசியல்வாதி

Share

அநுர வசிக்கும் வீடு..! நாட்டை இயக்கும் மறைகரத்தை கூறும் அரசியல்வாதி

நாட்டின் முக்கிய தீர்மானங்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தனது காலை உணவின் போது மேற்கொள்வதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

யூடியூப் தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் தொடர்மாடி கட்டிடமொன்றில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வசிப்பதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டில்வின் சில்வாவின் வீடும் அதே தொடர்மாடி கட்டிடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் காலத்திலும் வீடுகளில் அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டில் அவரின் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து நாட்டின் தீர்மானங்களை எடுத்ததை அவர் உதாரணமாக காட்டியுள்ளார்.

மேலும், ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு கட்சியை சார்ந்து இருக்கும் எனவும் இடதுசாரி ஆட்சி உள்ள ஏனைய நாடுகளில் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு குறித்த கட்சியின் பொதுச் செயலாளரிடமே இருக்கும் எனவும் கம்மன்பில கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...