16 7
இந்தியாசெய்திகள்

இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Share

இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கடற்படையினர் (Sri Lanka Navy) தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினர்.

அத்துடன், ஏனைய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

“தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு நீதி, “எங்கள் கடற்றொழிலாளர்களை மீண்டும் அழைத்து வாருங்கள்”, “இனி கைதுகள் வேண்டாம்”, “தமிழ்நாடு கடற்றொழிலாளர்களும் இந்தியர்களே” போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்தநிலையி;ல் தமிழ் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், அவர்கள் இலங்கையால் தவறாக நடத்தப்படும் இந்தியர்கள் என்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இதன்போது கருத்துரைத்துள்ளார்.

கைதுகள் காரணமாக இந்திய கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல பயப்படுவதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதி, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து துன்புறுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 97 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 164
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானின் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில்...

world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...

world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...