5 13
இலங்கைசெய்திகள்

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

Share

பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஒவ்வொரு பெற்றோல் லீற்றரிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 120 ரூபா பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டீசல் லீற்றரிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய 90 ரூபா பெற்றுக்கொள்வதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தொகையில் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், எமது ஆட்சியில் லீற்றர் ஒன்று 95 ரூபா செலுத்தியவர்கள் தற்பொழுது 280 ரூபாவிற்கு டீசல் விற்பனை செய்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை ஸ்திரதப்படுத்தியது தாங்களே என அவர்கள் கூறுகின்றார்கள்.

தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய சத்தியம் செய்தது போன்று செய்திருந்தால் இன்று வரிசை யுகம் உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆட்சியாளர்களும் ரணில் விக்ரமசிங்க செய்ததையே செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெட்டிப் பேச்சு பேசுவோரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...