2 13
இலங்கைசெய்திகள்

அநுர கட்சிக்குள் குழப்பம் : பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்.பிக்கள் பலர்

Share

அநுர கட்சிக்குள் குழப்பம் : பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு எம்.பிக்கள் பலர்

தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கணிசமான ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) தெரிவித்ததுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “அமைச்சர்களின் அழுத்தங்களாலேயே ஓரிரு மாதங்களுக்குள் 6 நிறுவனத்தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

தற்போதுள்ள 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கனிசமானோர் இவ்வாண்டுக்குள் நிச்சயம் பதவி விலகுவார்கள்.

அமைச்சொன்றின் செயலாளருக்கு எதிராக மேலதிக செயலாளர் ஒருவர் தனது உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்குள் அனுபவம் தொடர்பான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதிகாரத்துக்கு வர முன்னர் நாமல் கருணாரத்ன போன்றோர் வயல்களில் இறங்கி முதலைக் கண்ணீர் வடித்து போராட்டங்களை முன்னெடுத்தமையை, தற்போது விவசாயிகள் அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் நெல் கிலோ ஒன்றுக்கான உற்பத்தி செலவு 160 ரூபா எனக் கூறியவர்கள் இன்று அதனை விடக் குறைவான நிர்ணய விலையையே அறிவித்திருக்கின்றனர்.

அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நெல் ஆலை உரிமையாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமையால் அவர்களுக்கு இலாபம் கிடைக்கக் கூடிய தீர்மானங்களையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இதனால் அப்பாவி சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மக்கள் வீதிக்கிறங்கி போராடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...