3 11
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் அதிரடி தீர்மானத்தால் போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பும் இலங்கை

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்திற்கு சவால் விடுக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, கலப்பின நீதிமன்றம் அமைப்பது போன்ற திட்டங்களை அமெரிக்கா முன்வைத்தது. அதனை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில் இந்தத் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாம் உருவாக்கும் மனித உரிமைகள் திட்டத்தை நாமே முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய திட்டத்தை முறியடிக்க முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...