ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 03 பிப்ரவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 3.02.2025 குரோதி வருடம் தை மாதம் 21, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களின் உதவியால் எந்த ஒரு பணிகளையும் சிறப்பாக முடிக்க முடியும். இன்று சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த சில திட்டங்கள் வெற்றியடையும். திருமண வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகும். இன்று உற்சாகத்துடன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். அதே சமயம் சேமிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் வேலைகளை முடிப்பதில் சாதகமான நாளாக அமையும். அரசு தொடர்பாக வேலை நிறைவேறி மகிழ்வீர்கள். வணிகத்தில் லாபம் ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் விஷயத்தில் கவனமாக செயல்படவும். இன்று ஆபத்தான எந்த ஒரு செயலில் ஈடுபடுதல் அல்லது முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று தொண்டு, சேவை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் மன அமைதியை பராமரிக்க முயற்சி செய்யவும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்களின் புகழ் அதிகரிக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் முக்கிய வேலைகளை முடிப்பதில் துணை ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பதட்டமான சூழல் இருக்கும். பிரச்சினைகளுக்கான தீர்வை கண்டுபிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் கவனம் தேவை. இன்று நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை கையாள வேண்டிய சூழல் இருக்கும். அதனால் அவசர அவசரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பங்கு சந்தை அல்லது லாட்டரி தொடர்பான விஷயத்தில் லாபம் ஏற்படும். உங்கள் பழைய முதலீடுகள் மூலம் நன்மை அடைவீர்கள். முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற வாய்ப்புள்ளது.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்று முக்கியமான வேலைகள் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடவும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்த செல்லவும். இன்று உங்கள் இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பீர்கள். அதில் சகோதரர்களின் ஆலோசனை உங்களுக்கு தேவைப்படும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். இன்று கடன் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வெகு தூர பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்கள் பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அவர்களின் செயல்பாடு திருப்தியை அளிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தரக்கூடிய நல்ல நாளாக அமையும். இன்று உங்கள் நற்பெயருக்கு பங்கம் வரலாம். இன்று புதிய சொத்து வாங்கும் விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். வணிக திட்டங்களில் மகத்தான நன்மைகள் கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பாக வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். சில புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு மகத்தான நன்மைகள் தரக்கூடிய நாள். சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உறவினர்கள் மூலம் பரிசு, பாராட்டு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலை விரிவு படுத்துவது தொடர்பாக விஷயங்களில் கடினமான சூழல் உருவாகும். வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா, யாத்திரை செல்ல வாய்ப்புள்ளது. இன்று எந்த விதமான ஒழுக்க கேடான செயல்களில் இருந்து விலகி இருக்கவும்.