image 31498f2500
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து: குருக்கள்மடத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்!

Share

களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (நவம்பர் 7) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு (நவ 7) மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 3 பேரும் ஆரம்பத்தில் செட்டிப்பாளையம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...