10 1
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் புதிய திட்டம்! இலக்கு வைக்கப்படும் அநுர தரப்பு

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “நாமலுடன் கிராமம் கிராமமாக” நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“நாமலுடன் கிராமம் கிராமமாக திட்டத்தின் முதல் நிகழ்ச்சி நொச்சியாகம பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதும், அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆகும்.

நாமல் ராஜபக்ச இந்த நிகழ்ச்சியில் இணைய உள்ளார். மேலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று முக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...