20 31
சினிமாபொழுதுபோக்கு

விஜய் அவரோட குடும்பத்தோட இல்லைனு பேசிக்கிறாங்க..? விஜய்யின் சித்தப்பா கொடுத்த விளக்கம்

Share

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக காணப்படுபவர் இளைய தளபதி விஜய். இவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகின்றார். எனினும் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணிக்க உள்ளார் விஜய்.

இளைய தளபதி விஜய் தொடர்பில் சினிமா, அரசியல் என்பவற்றைத் தாண்டி அவருடைய தனிப்பட்ட குடும்ப ரீதியிலும் பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதற்கு எல்லாம் அசராதவராக தன்னுடைய  இலக்கை நோக்கி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை  ஆரம்பித்த விஜய்,  தனது முதல் மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இது பல அரசியல் தலைமைகளுக்கும் தலை இடியாக மாறியது. அத்துடன் விஜயின் இறுதி  படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த படமும் விஜய்யின் அரசியல் பற்றி பேசும் என நம்பப்படுகின்றது.

இந்த நிலையில், இளையதளபதி விஜயின் சித்தப்பா அவருடைய குடும்பம் பற்றி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவரிடம்  விஜய் பற்றி பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அவர் தனது பேமிலியுடன் இல்லை தனியாகத்தான் இருக்கின்றார் என்று கூறப்பட்டது.  இதன் உண்மை என்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், விஜய் தனது பேமிலியுடன் தான் இருக்கின்றார். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஏனென்றால் விஜய்யின் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டு உள்ளார்.

அவருடைய மகள் லண்டனில் படிக்கின்றார். இதனால் பெண் குழந்தைக்கு பாதுகாப்பு ஆகவே விஜயின் மனைவி சங்கீதா அவருடன் உள்ளார். பையன் எப்படி என்றாலும் இருக்கலாம் ஆனால் பெண் குழந்தையை தனியாக விட முடியாது.

இதனால் தான் ஒரு தாயாக அவர் தனது பிள்ளைகளை கவனிப்பதற்காக லண்டனில் வசித்து வருகின்றார். விஜயை பார்ப்பதற்கு ஓராயிரம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் அவருடைய பிள்ளைகளை பார்க்க அவருடைய தாயாக சங்கீதா மட்டும்தான் இருக்கின்றார். இந்த விஷயத்தை சும்மா ஊதி பெரிதாக்குகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6909cc4d3399b
சினிமாபொழுதுபோக்கு

‘அதர்ஸ்’ செய்தியாளர் சந்திப்பில் எல்லை மீறிய யூடியூபர்கள்: “முட்டாள்தனமான கேள்வி” – நடிகை கௌரி கிஷன் கோபம்!

‘அதர்ஸ்’படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகை கௌரி கிஷனிடம் சில யூடியூபர்கள் வரம்பு மீறிய கேள்விகளை...

ajith
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் புதிய ஆர்வம்: ரேஸுக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி! 65வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

திரைப்படம் தவிர தனக்குப் பிடித்த விஷயங்களிலும் தொடர் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் அஜித்குமார். அவர்...

harish kalyan pandiraj
சினிமாபொழுதுபோக்கு

‘தலைவன் தலைவி’ வெற்றிக்குப் பிறகு பாண்டிராஜ்: அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் – இது இரட்டை ஹீரோ கதையா?

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியாகிப் பெரிய வெற்றியைப்...

rashmika mandanna and vijay devarakonda marriage 2025 11 06 12 39 52
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பிப்ரவரியில் உதய்பூர் அரண்மனையில் நடக்கப் போகிறதா?

நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாகக் காதலித்து வரும்...