9 54
இலங்கைசெய்திகள்

மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு: விஜேராம வீட்டில் குவியப்போகும் மொட்டு உறுப்பினர்கள்

Share

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (27) நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளுமாறு மகிந்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

அதனை உறுதிபடுத்தும் விதமாக அண்மையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உட்பட பலரும் வெளிப்படையாக கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், அனைத்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களையும் ஒன்று சேருமான மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்தியானது, பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...