இலங்கை
எந்த நேரத்திலும் வெளியேற தயார்.!ராஜபக்ச குடும்பத்தின் ஜனாதிபதிக்கான அறிவிப்பு
அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தை விட்டு எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஜனாதிபதி அநுர குமார விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனது தந்தை தற்போது வசித்து வரும் வீடு அவரது தனிப்பட்ட சொத்து அல்ல எனவும், அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றாலும் அரசியலமைப்பின் படி முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சலுகையாக அது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீட்டை விட்டு வெளியேறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் மகிந்த ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.