25 678e6a04bf846
இலங்கைசெய்திகள்

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

Share

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தொடங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் பெற்றுள்ளது.

இன்றையதினம் (20) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல ஆகியோரின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...