12 28
உலகம்செய்திகள்

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

Share

பிரித்தானியா உக்ரைன் இடையே 100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம்: ரஷ்யா கவலை

பிரித்தானியாவும் உக்ரைனும் தங்களுக்கிடையே 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் சுமார் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பா உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் பிரித்தானியா உக்ரைனுடன் 100 ஆண்டுகள் கூட்டாளர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பிரித்தானிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரித்தானியா உக்ரைனில் ராணுவ தளங்களை அமைக்கலாம் என்பது தொடர்பில் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskovஇடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த Peskov, பிரித்தானியா ஒரு நேட்டோ நாடு என்பதால், எங்கள் நாட்டின் எல்லைக்கு அருகே அது ராணுவ தளத்தை அமைப்பது உண்மையாகவே கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயம்தான்.

எப்படியானாலும், என்ன நடக்கும் என்பது குறித்து ஆராயவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார் Peskov.

பிரித்தானியாவின் நடவடிக்கை புடினுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. ஆகவே, அதற்கு பதிலடி கொடுக்க புடின் அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...