17 9
இலங்கைசெய்திகள்

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi )இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் செவ்வாய்க்கிழமை (07) அறிவித்துள்ளது.

எனினும் அவர் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), டிசம்பரின் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த போது, பிரதமர் மோடியை  இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க செப்டம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனது முதல் விஜயமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அத்துடன் திசாநாயக்க பொறுப்பேற்றவுடன் கொழும்புக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டு பிரமுகர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர்(Dr S Jaishankar) ஆவார்.

பிரதமர் மோடி 2015 முதல் 2017 வரை இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

திஸாநாயக்க விரைவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று(07) அறிவித்தார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...